Copa Americaவில் காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

30 ஆனி 2024 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 3709
கோபா அமெரிக்கா 2024யில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது.
Hard Rock மைதானத்தில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா (Argentina) அணியை எதிர்கொண்டது பெரு (Peru).
காயத்தினால் மெஸ்ஸி அமர்ந்திருக்க, அர்ஜென்டினா அணி சாதிக்குமா என்ற கேள்வி நிலவிய சூழலில் பெருவிற்கு எதிராக வீரர்கள் களமிறங்கினர்.
முதல் பாதியில் கோல் விழாத நிலையில், 47வது நிமிடத்தில் லாடரோ மார்டினஸ் (Lautaro Martinez) மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 86வது நிமிடத்தில் பெருவின் இரு வீரர்களை சமாளித்து பந்தை விரட்டி சென்ற மார்டினஸ், கோல் கீப்பர் நெருங்கிபோது பந்தை உயர தூக்கி கோலாக மாற்றினார்.
இதன்மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.