Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகாரி தாக்கிய மர்ம நபர் தொடர்பில் வெளியாகிய தகவல்

இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகாரி தாக்கிய மர்ம நபர் தொடர்பில் வெளியாகிய தகவல்

30 ஆனி 2024 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 747


செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேக நபர் மீது அதிகாரியின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட்டால் தாக்கியதில் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.

இதன் போது கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தற்காப்புக்காக சந்தேக நபரை சுட்டுக் கொன்றார். 

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையில், காயமடைந்த அதிகாரி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, போல்ட் அகற்றப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் செர்பியாவின் உள்துறை அமைச்சர் ஐவிகா டாசிக் தெரிவித்துள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திய போதிலும், செர்பியா இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை தொடர்ந்து பேணி வருவது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்