Paristamil Navigation Paristamil advert login

■ பிரபலங்களின் வாக்குப்பதிவுகள்!

■ பிரபலங்களின் வாக்குப்பதிவுகள்!

30 ஆனி 2024 ஞாயிறு 11:08 | பார்வைகள் : 2644


பிரபலங்களின் வாக்குப்பதிவுகள்! 

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்!


 ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் தனது வாக்கினை Le Touquet (Pas-de-Calais) நகரில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 


* முன்னாள் பிரதமர் எத்துவார் பிலிப் (Édouard Philippe) Le Havre(Seine-Maritime) நகரில் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். ஜனாதிபதி மக்ரோனின் உற்ற நண்பனாரா இவர்,  மக்ரோனின் அரசாங்கத்தை பிரதமராக வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* Insoumis  கட்சியின் முன்னாள் தலைவர் Mathilde Panot தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவர் Nouveau Front populaire கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். 

* பிரதமராக வருவார் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்படுகிற ஜோர்தான் பார்தெல்லா Garches (Hauts-de-Seine) நகரில் தனது வாக்கினை சற்று முன்னர் செலுத்தினார். 28 வயதுடைய இளம் அரசியல்வாதியான இவர், மரீன் லு பென்னின் Rassemblement national கட்சியின் தலைவராவார். 

* ஜனாதிபதி வேட்பாளர் Eric Zemmour தனது வாக்கினை பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தார். 

* பிரதமர் கப்ரியல் அத்தால் தனது வாக்கினை சற்று முன்னர் Vanves (Hauts-de-Seine) நகரில் பதிவு செய்தார். 

* முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து  Tulle (Corrèze) நகரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் போட்டியிட்ட குறித்த தொகுதியில் மரியாதை நிமிர்த்தமாக ஜனாதிபதி மக்ரோனின் கட்சி சார்பாக எவரும் போட்டியிடவில்லை. அவர் தனது தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் ஆதரவோடு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

* மரீன் லு பென் Hénin-Beaumont நகரில் தனது வாக்கினை சற்று முன்னர் செலுத்தினார். பா-து-கலே மாவட்டத்தின் குறித்த தொகுதியைச் சேர்ந்த அவரது Rassemblement national  கட்சி, பெரும்பான்மை ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்