Paristamil Navigation Paristamil advert login

■ 1981 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு!

■ 1981 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு!

30 ஆனி 2024 ஞாயிறு 11:31 | பார்வைகள் : 3487


தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நண்பகல் வரை 25.9% சதவீதமான வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022, 2017, 2014, 2007, 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களை விட, 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் போது நண்பகல் வரை 27.6% சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஐந்தாம் குடியரசின் முதலாவது சோசலிச கட்சி ஜனாதிபதி வேட்பாளர் François Mitterrand இற்கு வாக்குகள் அளிக்க வாக்காளர்கள் திரண்டு வருகை தந்தனர். அந்த தேர்தலில் அவர் 51.76% சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலின் பின்னர், எப்போதுமே அதுபோன்ற வாக்குப்பதிவுகள் பின்னர் எப்போதும் பதிவாகவில்லை. பின்னர் தற்போது இடம்பெற்று வரும் தேர்தலில் நண்பகல் வரை 25.9% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்ற 2022 ஆம் ஆண்டு 18.43% சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்