Paristamil Navigation Paristamil advert login

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலின் முதல் சுற்றின், முதல் கட்ட முடிவுகள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலின் முதல் சுற்றின், முதல் கட்ட முடிவுகள்.

1 ஆடி 2024 திங்கள் 08:54 | பார்வைகள் : 9612


பிரான்சின் நாடாளுமன்றத்திற்கு 577 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலின் முதல் சுற்று இன்று 30/06 நடைபெற்ற முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த ஜூன் 9ம் திகதி கலைக்கப்பட்ட நாளுமன்றத்திற்கான தேர்தலுக்கு 21 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மிகவும் அவசரமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டே தேர்தல் நடைபெற்றது.

இதில் தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement National கட்சியும், அதனை தாங்கிப்பிடித்த Les République கட்சியின் ஒரு பகுதியும் இணைந்து. 32%சதவீத  வாக்குகளை பெற்று முதலாம் இடத்தினையும், இடதுசாரி கட்சிகளின் கூட்டணி 'Nouveau Front Populaire' 28%  சதவீத  வாக்குகளை பெற்று   இரண்டாம் இடத்தினையும், ஆளும் Majorité présidentielle அல்லது Renaissance கட்சி 20%சதவீத    வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளது

இனி ஏனைய கட்சிகளுடன் இணைந்து இரண்டாம் கட்ட தேர்தலை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பின்னரே யார் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பார்கள், அது பெரும்பாண்மை ஆட்சியாக இருக்குமா என தெரியவரும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்