Paristamil Navigation Paristamil advert login

’ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது!’ பிரதமர் கப்ரியல் அத்தால்..!!

’ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது!’ பிரதமர் கப்ரியல் அத்தால்..!!

1 ஆடி 2024 திங்கள் 06:11 | பார்வைகள் : 5917


‘இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது!’ என பிரதமர் கப்ரியல் அத்தால் கோரியுள்ளார்.

நடைபெற்று முடிந்த முதலாம் சுற்று வாக்கெடுப்பில், தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்ரோனின் மறுமலர்சி கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்காக மக்ரோனின் Renaissance கட்சி சார்பாக 300 வேர்பாளர்கள் தேர்வாகியுள்ளனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 289 ஆசனங்களை பெற்வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒற்றை வாக்கினை கூட Rassemblement National கட்சிக்கு செலுத்தக்கூடாது என பிரதமர் தெரிவித்தார்.


”தீவிர வலதுசாரிகள் அதிகாரத்தின் வாயிலில் உள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தவேண்டும். வலதுசாரிகளின் கொடூரமான திட்டங்களுக்கு எதிரான அரசாங்கம் தனது முழு பலத்துடனும் எழுந்து நிற்கிறது!” என அவர் மேலும் தெரிவித்தார்.


நேற்று தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், பிரதமர் அலுவலகத்தில் வைத்து அவர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

முதலாம் சுற்று வாக்கெடுப்பினை அடுத்து, முதன்முறையாக வலதுசாரிகள் பொது தேர்தல் ஒன்றில் பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்