Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோவில் கோர விபத்து... 16 பேர் பலி

மெக்சிகோவில் கோர விபத்து... 16 பேர் பலி

24 ஆவணி 2023 வியாழன் 08:55 | பார்வைகள் : 8004


வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒக்ஸாகா மாநிலத்தை நோக்கி தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டு இருந்தது.

அப்போது லொறி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதியதில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 16 பேர் பலியாகினர்.

மேலும் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 15 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வெனிசுலாவைச் சேர்ந்தவர் என்றும் மெக்சிகோவின் தேசிய குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் 9 பேர் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா பயணிகள் அமெரிக்காவில் தஞ்சம் கோரி, CBP One திட்டத்தில் சந்திப்புகளை பெற்றுள்ளனர் என்று INM கூறியது.

புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லையை அடைய லொறிகள் மற்றும் பேருந்துகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்