Saint-Denis நகரத்துடன் இணையும் மற்றொரு நகரம்..??!
30 வைகாசி 2024 வியாழன் 11:13 | பார்வைகள் : 11181
Saint-Denis நகரத்துடன் அருகில் உள்ள Pierrefitte நகரத்தை இணைப்பது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள இந்த இரு நகரங்களையும் இணைத்து ஒரு நகரசபைக்குட்பட்ட ஒரே பகுதியாக இணைப்பது தொடர்பில் நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மே 30, வியாழக்கிழமை மாலை இது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்கெடுப்பில் ஆதரவு வாக்குகள் பெறப்பட்டால் இரு நகரங்களும் இணைக்கப்பட்டு அது Saint-Denis நகரமாகவே அழைக்கப்படும்.
Pierrefitte நகரம் 31,000 மக்கள் தொகையை கொண்டதாகும். Saint-Denis நகரம் 113,000 மக்கள் தொகையை கொண்டதாகும். இரண்டு நகரங்களும் இணைக்கப்பட்டால் இல் து பிரான்சுக்குள் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நகரமாக (150,000 பேர்) மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan