யாழிலிருந்து வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்களுக்கு அதிர்ச்சி

24 ஆவணி 2023 வியாழன் 09:03 | பார்வைகள் : 10569
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்று நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று 23 புதன்கிழமை இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்த பஸ் புறப்பட்டதாகவும் இன்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் பஸ் சாரதி தெரிவித்தார்.
இந்த சம்பவம் காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது.
பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1