Paristamil Navigation Paristamil advert login

 சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக் 

 சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக் 

31 வைகாசி 2024 வெள்ளி 08:46 | பார்வைகள் : 3228


இந்தியாவுக்காக விளையாடுவேன் ஆனால் எப்போது என்பதில் கவலை இல்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். 

2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், இந்த சீசனில் 573 ஓட்டங்கள் விளாசினார்.

இதில் அவரது சராசரி 52.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 149.21 ஆகும். 22 வயதான பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

ஆனால், பாலிவுட் ஹீரோயின்கள் குறித்து அவர் யூடியூப்பில் தேடியது குறித்த History, சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. 

இதற்கிடையில், டி20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் பெறாதது குறித்து ரியான் பராக் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், ''ஒரு கட்டத்தில், நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வேண்டும், சரியா? அது என் நம்பிக்கை. நான் இந்தியாவுக்காக விளையாடப் போகிறேன். எப்போது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஓட்டங்கள் எடுக்காமல் இருந்தபோதும், நான் இந்தியாவுக்காக விளையாடப் போகிறேன் என்று முன்பு நேர்காணலில் கூறினேன்.

அது நான் என்னை நம்புவது, அது எனது திமிர் இல்லை. நான் 10 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, என் அப்பாவிடம் என் திட்டம் இருந்தது. நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் இந்தியாவுக்காக விளையாடுவேன்'' என தெரிவித்துள்ளார்.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்