Paristamil Navigation Paristamil advert login

இலங்கை செல்லும் 'கோட்' படக்குழு..

இலங்கை செல்லும் 'கோட்' படக்குழு..

31 வைகாசி 2024 வெள்ளி 09:18 | பார்வைகள் : 3717


தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் அடுத்த கட்டமாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முக்கிய காட்சியை இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டதாகவும், ஆனால் விஜய்யை இலங்கை அழைத்துச் செல்வதால் சில தர்ம சங்கடம் ஏற்படும் என்பதை அடுத்து இலங்கை பயணம் தவிர்க்கப்பட்டது என்றும் அதன் பிறகு தான் திருவனந்தபுரம் மைதானத்தில் படப்பிடிப்பு நடந்தது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது குழுவினர்களுடன் தற்போது இலங்கை செல்ல இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் மைதானத்தின் சில காட்சிகளை படமாக்கி அதை திருவனந்தபுரத்தில் எடுத்த காட்சியோடு இணைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் உள்பட நடிகர் நடிகையர் யாரும் செல்லவில்லை என்றும் டெக்னிக்கல் டீம் மட்டுமே சென்று இலங்கை மைதானத்தின் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்