சோயா உணவுகள் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறதா..?
31 வைகாசி 2024 வெள்ளி 09:23 | பார்வைகள் : 1552
சோயாவில் உள்ள பைடோஸ்ட்ரோஜெனில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளது. இது தமனியின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
தினமும் 25 கிராம் அளவு சோயா புரதம் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைய உதவுவதோடு இதய நோய் வரும் ஆபத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஓரளவிற்கே பயன் தரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நாம் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் வாரத்திற்கு ஒருமுறை சோயா உணவுகளை எடுத்துக்கொள்வது போதுமானதல்ல. தினமும் 25 கிராம் அளவாவது சோயா புரதம் எடுத்துக்கொண்டால் தான் நாம் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு நாம் இரண்டு வேளை சோயா உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஒரு கப் சோயா பால் மற்றும் ஃபோஃபு அல்லது டெம்பே எடுத்துக்கொள்வது நாம் எதிர்பார்க்கும் பயனைத் தரும். ஆனால் ஒருவரின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்கைமுறையை பொறுத்து இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மாறுபடும். ஒருவரின் மரபணு காரணிகளை பொறுத்து எல்லாருக்கும் ஒரேப்போன்ற நன்மைகள் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது
அதேசமயம் கரையக்கூடிய நார்ச்சத்துகளான ஓட்ஸ், பார்லி, ஆரோக்கிய கொழுப்புகளான நட்ஸ், ஆலிவ் ஆயில் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக பயனளிக்கின்றன. சொல்லப்போனால் இந்த உணவுகள் சோயாவை விட அதிக நன்மைகளை கொண்டிருக்கின்றன.
சோயா உணவுகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய ஆபத்துகளையும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அலர்ஜி மற்றும் ஹார்மோன் விளைவுகள்:
சிலருக்கு சோயா உணவுகள் அலர்ஜியை உண்டாக்கும். அதேப்போல் தைராய்டு பிரச்சனை அல்லது ஹார்மோன் சென்சிடிவான புற்றுநோய் உள்ளவர்கலுக்கு இது ஹோர்மானில் விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் அளவாக உண்டால் பெரும்பாலான நபர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.