Paristamil Navigation Paristamil advert login

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது, எங்கு தெரியுமா?

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது, எங்கு தெரியுமா?

31 வைகாசி 2024 வெள்ளி 09:35 | பார்வைகள் : 1880


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இரண்டாவது மகன் பிரேம்ஜி அமரன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவருக்கு 45 வயது ஆன நிலையில்,  திருமணம் செய்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

மேலும் அவரின் திருமணம் குறித்து பல நேர்காணல்களிலும்,  ரசிகர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார் பிரேம்ஜி அமரன். இந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

அதுவும் சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் வரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறுகிறது.

அவரின் திருமண விழாவிற்கு சில முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு என்றும் முடிவெடுத்துள்ளனர். திருமண அழைப்பிதழ் வைக்கும் பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இது மூலம் பல ஆண்டுகளாக பேச்சுலராக இருந்த பிரேம்ஜி அமரன் தற்போது திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறார். அவருக்கு தமிழ் திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்