Paristamil Navigation Paristamil advert login

சிகரெட் பக்கெட்டுகளுக்கு இனி விலை அதிகரிப்பு இல்லை. புகையிலை நோய்க்கு சிகிச்சை.Yves Bur

சிகரெட் பக்கெட்டுகளுக்கு இனி விலை அதிகரிப்பு இல்லை. புகையிலை நோய்க்கு சிகிச்சை.Yves Bur

31 வைகாசி 2024 வெள்ளி 09:43 | பார்வைகள் : 1817


இன்று 31/05/2024 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலைக்கு எதிரான கூட்டணியின் தலைவர் Yves Bur கருத்து தெரிவிக்கையில் "நாங்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் புகையிலை பழக்கத்தில் மோசமான மாணவர்கள், எங்களுக்கும் புகையிலை நோய்க்கு எதிரான பிரச்சாரங்களை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை அதனால் எதிரான பிரச்சாரத்துக்கு முதலிடப்படுகின்ற நிதியை அந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதே சிறந்த வழி என தெரிவித்தார்.

எனவே தொடர்ந்து சிகரெட் பக்கெட்டுகளுக்கு விலையை அதிகரிப்பதை நிறுத்தி,  புகையிலை பாவனைக்கு எதிரான பிரச்சாரத்தில் தோல்வி கண்டுள்ள நாங்கள் அதற்கு செலவிடும் நிதியை  புகையிலை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்துவோம் இதைத்தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

புகையிலை நிகோடினுக்கு அடிமையாகுவது, அது ஒரு கடினமான போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கு சமம் என்பதினை நாங்கள் மறந்து விடக்கூடாது எனவும் Yves Bur தனது கருத்தில் நினைவு கூர்ந்தார். சிகரெட் பக்கட்டிகளின் விலைகளை அதிகரிப்பது பாவனையாளர்களுடைய அளவை குறைக்கும் என்பது உண்மைதான்,என்றாலும் அதனால் ஏற்படுகின்ற நோய்க்கான சிகிச்சை செலவுகள் மிகக் குறைவாகவே இருக்கிறது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்