Paristamil Navigation Paristamil advert login

Épinay-sur-Seine : வீதியை விட்டு விலகி சென் நதிக்குள் பாய்ந்த மகிழுந்து. இருவரது சடலங்கள் மீட்பு!

Épinay-sur-Seine : வீதியை விட்டு விலகி சென் நதிக்குள் பாய்ந்த மகிழுந்து. இருவரது சடலங்கள் மீட்பு!

31 வைகாசி 2024 வெள்ளி 15:53 | பார்வைகள் : 8617


மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி சென் நதிக்குள் பாய்ந்துள்ளது. மகிழுந்தில் பயணித்த தம்பதிகள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில், rue de l'Yser மற்றும் boulevard Foch பகுதிகளுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்று, திடீரென வீதியை விட்டு விலகி சென் நதிக்குள் பாய்ந்துள்ளது.

இதனை பார்த்த பாதசாரிகள் சிலர் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து தீயணைப்பு படையினர் மகிழுந்துக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்க போராடினர். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது.

அதிகாலை 4 மணி அளவில் மகிழுந்து வெளியே எடுக்கப்பட்டது. மகிழுந்துக்குள் இருந்து தம்பதிகள் இருவரது சடலங்கள் மீக்கப்பட்டன. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்