Aubervilliers இல் கிரைனைட் தாக்குதல்.. பணம் பெற்றுக்கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிப்பு!

31 வைகாசி 2024 வெள்ளி 20:00 | பார்வைகள் : 6558
Aubervilliers நகரில், கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை மகிழுந்து ஒன்றின் மீது கிரைனைட் குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் பாதசாரிகள் இருவர் காயமடைந்திருந்தனர்.
இந்த குண்டு வீச்சினை மேற்கொண்டிருந்த ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர் குற்றவியல் காவல்துறையினரால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
18 வயதுடைய குறித்த நபர், பணத்தேவைக்காக மேற்படி செயலில் ஈடுபட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மர்ம நபர்கள் சிலரிடம் இருந்து கிரைனைட் பெறப்பட்டதாகவும், அதனை வீசுவதற்கு பணம் வழங்குவதாக உறுதியளித்ததாகவும், அதையடுத்தே கிரைனைட் தாக்குதலை அவர் மேற்கொண்டதாகவும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
ஆனால், தாக்குதலின் பின்னர் அவர்கள் தொடர்புகொள்ளவில்லை எனவும், பணம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.