யூன் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் பிரித்தானிய விமானங்கள் பிரான்ஸ் வான்பரப்பில் பறக்கத்தடை.

1 ஆனி 2024 சனி 07:59 | பார்வைகள் : 4932
இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான Normandie தரையிறக்கம் இவ்வாண்டு 80வது ஆண்டினை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வினை தரையிலும், வானிலும் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நேசநாட்டு தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள், தரையிறக்கத்தில் பங்கெடுத்த நாடுகளின் இராணுவ வீரர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர். இந்த நிலையில் பிரித்தானிய Royal Air Force படையினரின் 1940ம் ஆண்டு போரில் பயன்படுத்திய BBMF ரக போர் விமானங்களை Normandie கடற்கரை வான்பரப்பில் பறக்கவிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அந்த முயற்சி இப்போது கைவிடப்பட்டுள்ளதுடன், குறித்த ரக விமானங்கள் வானில் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்காக கடந்த மே மாதம் 25ம் திகதி BBMF ரக விமானங்களை வானில் செலுத்தி பயிற்சிகள் நடைபெற்றது அப்போது ஏற்பட்ட விமான விபத்தில் Mark Long என்னும் இராணுவ விமானி கொல்லப்பட்டார் இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்காத நிலையிலேயே வரும் யூன் 5ம் 6ம் திகதிகளில் குறித்த விமானங்கள் பிரான்ஸ் வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.