Paristamil Navigation Paristamil advert login

ட்ராம் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு இழப்பீடு..!

ட்ராம் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு இழப்பீடு..!

1 ஆனி 2024 சனி 08:28 | பார்வைகள் : 2830


T12 ட்ராம் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து சபை (Île-de-France Mobilités) அறிவித்துள்ளது.

Massy-Palaiseau இல் இருந்து Évry-Courcouronnes வரை பயணிக்கும் குறித்த ட்ராம் சேவை, கடந்த டிசம்பரில் இருந்து தாமதங்களையும், தடைகளையும் சந்தித்திருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். அதை அடுத்தே அவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இழப்பீடு வரும் 2025 ஆம் ஆண்டிலேயே வழங்கப்படும் எனவும்,  Île-de-France Mobilités இனால் வழங்கப்படும் வருடாந்த இழப்பீடுகளுடன் (தாமதங்களைச் சந்தித்த தொடர்ந்துகளுக்கான இழப்பீடுகள் வருட ஆரம்பத்தில் கணக்கிடப்பட்டு, வழங்கப்படும்) இணைத்து இந்த T12  ட்ராம் சேவைக்கான இழப்பீடுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ராம் சேவைகள் கடந்த  ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. போதிய சாரதிகள் இல்லை என்பதால் இந்த தாமதங்கள் ஏற்படுவதாகவும்,  56 சாரதிகளுக்கான தேவை இருந்தும் தற்போது  32 சாரதிகள் மட்டுமே கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்