மூன்று வீரர்களை வெளியேற்றும் அல் ஹிலால் அணி
24 ஆவணி 2023 வியாழன் 09:41 | பார்வைகள் : 2946
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியரை ஒப்பந்தம் செய்த நிலையில், தற்போது அல் ஹிலால் அணி நிர்வாகம் மூன்று வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல் ஹிலால் அணி கடந்த சீசனில் தங்களது லீக் நிலையின் மூலம் கான்டினென்டல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த சீசனில் பல புது முகங்களை களத்தில் இறக்கவும் முடிவு செய்து, பல புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில், பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர், அலெக்சாண்டர் மிட்ரோவிக், ரூபன் நெவ்ஸ் மற்றும் மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பவுனோ ஆகிய பிரபலங்களை களமிறக்க உள்ளது.
ஒவ்வொரு அணியும் 8 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தங்கள் அணியில் உட்படுத்த முடியும் என்பது விதியாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது அல் ஹிலால் நிர்வாகமும் தங்களது அணியை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து பல வீரர்களை அல் ஹிலால் நிர்வாகம் வெளியேற்றி வருகிறது.
AFC சாம்பியன்ஸ் லீக் விதியின் படி ஆசியாவிற்கு வெளியே பிறந்த ஐந்து வீரர்களை ஒப்பந்தம் செய்ய மட்டுமே அணிகள் அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால் அல் ஹிலால் அணியில் இந்த சீசனில் 7 பேர்கள் அந்தவகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
தற்போது அதில் மூவரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.