இஸ்ரேலினால் மீட்கப்பட்ட ஹமாசினால் கொல்லப்பட்ட பிரெஞ்சு உடல் எச்சஙகள்!!

1 ஆனி 2024 சனி 09:40 | பார்வைகள் : 5413
மெக்சிக்கோவில் குடியேறிய பிரெஞ்சுப் பிரஜையின் உடல் எச்சங்கள் இஸ்ரேல் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இவர், காசாப் பகுதிக்கு அருகாமையில் நடந்த ஒரு இசைநிகழ்ச்சிக்காக சென்ற இவர் ஹமாசின் இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் ஹமாசினால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் மேலும் இருவரின் உடல் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் அடையாளங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதே சம்பவத்தில் ஹமாசினால் கடத்தப்பட்ட மேலும் இரண்டு பிரெஞ்சுப் பிரஜைகளின் நிலைமை இன்னும் என்னவென்று தெரியவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.