Paristamil Navigation Paristamil advert login

தெலுங்கு நடிகர் மகளுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம்?

தெலுங்கு நடிகர் மகளுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம்?

1 ஆனி 2024 சனி 09:48 | பார்வைகள் : 1142


 சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதன்படி இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அதாவது கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் பரவலாக பரவி வருகின்றன. அதாவது 41 வயதாகும் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் சிம்புவின் தந்தையும் பிரபல நடிகருமான டி. ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை தான் சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. எனவே சிம்புவின் வருங்கால மனைவி யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்