ஹன்சிகாவின் காந்தாரி தோற்றம் -பிரபல இயக்குனர் மீது ரசிகர்கள் அதிருப்தி..!
1 ஆனி 2024 சனி 09:59 | பார்வைகள் : 5254
தமிழ் சினிமாவின் அழகான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவை அகோரமாகவும் அசிங்கமாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் தனது படத்தில் காட்டி இருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஆர் கண்ணன் என்பதும் இவர் ’ஜெயங்கொண்டான்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி பிறகு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இவர் ’காந்தாரி’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடந்து வருகிறார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவில் ஹன்சிகா தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அழகு பொம்மையாக பல படங்களில் ஹன்சிகாவை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் அகோரமாகவும் அருவருப்பாகவும் இருப்பதை பார்த்து ஹன்சிகாவை இந்த அளவுக்கு யாராலும் அசிங்கப்படுத்த முடியாது என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் கதை, இயக்குனர் ஆர் கண்ணனின் மற்ற படங்களின் கதையை விட வித்தியாசமாக இருப்பதாகவும் ஒரு நல்ல திகில் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருப்பதாகவும் சிலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan