Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்!

Hauts-de-Seine : ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்!

1 ஆனி 2024 சனி 14:00 | பார்வைகள் : 6892


பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 32 வயதுடைய மோர்கன் எனும் கொள்ளையன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Hauts-de-Seine நகரில் அவர் அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வந்திருந்த நிலையில், எதேர்ச்சையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Boulogne-Billancourt  பகுதியின் rue de la Saussière வீதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது வீட்டின் கூரையில் மர்ம பொதி ஒன்று இருப்பதை கடந்த மே 17 ஆம் திகதி காலை 6.45 மணி அளவில் கண்டுபிடித்தார். அதையடுத்து, அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.

குறித்த பையினை ஆய்வு செய்த காவல்துறையினர், அதற்குள் பிஸ்டல் துப்பாக்கிகள், 7.62 மி.மீ கலிபர் துப்பாக்கி, துப்பாக்கி சன்னங்கள், காவல்துறையினர் கைகளில் அணியும் பட்டிகள், மின் விளக்கு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்துள்ளன. 

விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், குறித்த பொதி அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, குறித்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர். 

உள்ளே, நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த மோர்கன் எனும் கொள்ளையன் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். அத்தோடு குறித்த நபரது பொதிதான் அது என்பதை மிக சுலபமாக அடையாளம் கண்டுகொண்டனர். 

மோர்கன் எனும் குறித்த நபர் 2000 ஆம் ஆண்டில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்