Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இரண்டாவது சுற்றும் டிரா!

உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி -  இரண்டாவது சுற்றும் டிரா!

24 ஆவணி 2023 வியாழன் 09:47 | பார்வைகள் : 5322


இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கும் ,உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனுக்கு இடையேயான இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று டிரா ஆகியுள்ளது.

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கால்சன் மற்றும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா இருவரும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து இன்று மலை 4.30 மணியளவில் இரண்டாம் சுற்றுக்கள் போட்டி துவங்கியது. இந்தப்போட்டியில் கடும் சவாலை விடுத்த பிரக்ஞானந்தா விதவிதமாக விளையாடினார்.

இந்த இரண்டாவது போட்டியும், 30 நகர்தலுக்கு பிறகு டிரா ஆகியுள்ளது.

இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆகியிருக்கும் நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டி இருவருக்கும் இடையே நடைபெறவுள்ளது.

டைபிரக்கர் ஆட்டத்தில் இருவரும் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும். இருவருக்கும் இடையிலான டை பிரேக்கர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

----

 

வர்த்தக‌ விளம்பரங்கள்