போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் திட்டம் - பைடன் அறிவிப்பு
1 ஆனி 2024 சனி 13:08 | பார்வைகள் : 3165
இஸ்ரேல் நாடானது காசா மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இவர்களது போரை உலக நாடுகள் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் யோசனையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹமாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி இஸ்ரேலின் ஆறுவாரகால யுத்தநிறுத்த திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி காசாவில்பொதுமக்கள் அதிகமாகவாழும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவார்கள்.
மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் பணயக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜோபைடன் முன்வைத்துள்ள திட்டத்தில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த திட்டத்தினை சாதகமாக பரிசீலிக்கவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்தில் முழுமையான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.
அத்துடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் விடுதலையும் காசாவின் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படையினர் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.