Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் ஆயுதமுனையில் கொள்ளை!

பரிஸ் : கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் ஆயுதமுனையில் கொள்ளை!

2 ஆனி 2024 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 7965


பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் நேற்று சனிக்கிழமை காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பர கைக்கடிகாரங்கள், கைப்பைகள் உள்ளிட்ட பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

rue Duroc heard வீதியில் உள்ள வீடொன்றுக்கு காலை 8.30 மணிக்கு வருகை தந்த ஒருவர், ‘பொதி ஒன்றை விநியோகம் செய்ய வந்ததாக’ தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டின் கதவு திறக்கப்பட்டபோது, ஆயுதங்களுடன் மூவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்தவர்களை கட்டி வைத்து ஆயுத முனையில் மிரட்டி வீட்டில் இருந்த ஆடம்பர பொருட்களை கொள்ளையிட்டனர்.

கைக்கடிகாரங்கள், தோலினால் செய்யப்பட்ட விலையுயர்ந்த கைப்பைகள் போன்ற பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

முன்னதாக, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பரிசில் மற்றுமொரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 1.3 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள கைக்கடிகாரங்களை திருடிய 17 தொடக்கம் 19 வயதுடைய மூவரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்