Paristamil Navigation Paristamil advert login

இளமையாக இருப்பது எப்படி?

இளமையாக இருப்பது எப்படி?

2 ஆனி 2024 ஞாயிறு 11:48 | பார்வைகள் : 1452


வயது அதிகரிக்கும்போது இளமைத் தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.அத்தோடு சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும்.

வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும்.இதற்க்கு ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமைத் தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.அவை எவையென இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிவப்பு குடைமிளகாய் வெளிநாடுகளில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'Super Food ' உணவாக கருதப்படுகின்றது.இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையைத் தடுக்கக்கூடியது.இதில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும்.

உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றுமொரு பொருள்,பப்பாளி.இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதைத் தடுக்கக்கூடியது.இந்தப் பழத்தில் விட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கல்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன.மேலும் இதிலுள்ள மேலதீக சத்துக்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடி வயதான அறிகுறிகள் வெளிப்படுவதைத் தாமதப்படுத்துகின்றது .

ப்ளூபெர்ரி பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இது சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றது.

அவகேடோ பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் இது மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு உதவுகின்றன.மேலும் அவகேடோ பழத்தில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் அது இறந்த சரும செல்களை அகற்ற உதவி பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகைக் கொடுக்கிறது.

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறையும் என்பதால் அதனை ஈடு செய்வதற்கு இந்த உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்