Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் கொட்டப்பட்ட 50,000 கன மீற்றர் கழிவு நீர்.!

சென் நதியில் கொட்டப்பட்ட 50,000 கன மீற்றர் கழிவு நீர்.!

2 ஆனி 2024 ஞாயிறு 13:43 | பார்வைகள் : 3309


சென் நதிக்குள் 50,000 கன மீற்றர் கழிவு நீர் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Yvelines மாவட்டத்தில் உள்ள Conflans-Sainte-Honorine பகுதியில் கழிவு நீர் உறிஞ்சும் குழாயில் கடந்தவாரம் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அதையடுத்து சென் நதிக்குள் பெருமளவான கழிவு நீர் கலந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50,000 கன மீற்றர் அளவு கழிவு நீர் நதியில் கலந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கழிவு நீர் கலந்த பகுதி மிக மோசமாக பாதிப்படைந்ததாகவும், குப்பை கூழங்கள் நதியில் கலந்ததாகவும், அதன் நிறமும் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் உறிஞ்சும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் மீது Conflans-Sainte-Honorine நகரசபை வழக்கு தொடுத்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்