பிரித்தானியா நோக்கிய கடற்பயணம்... 26% சதவீதம் வீழ்ச்சி!

2 ஆனி 2024 ஞாயிறு 15:51 | பார்வைகள் : 8781
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான ஒருவருடத்தில் 3,567 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது முந்தைய வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 26% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் 130 படகுகள் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தன. அதில் 53 படகுகள் (41% சதவீதமானவை) வெற்றிகரமான பிரித்தானியாவைச் சென்றடைந்தன எனவும், மீதமானவை நடுக்கடலில் வைத்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா-து-கலே நகர கடற்கரைகளில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்கும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு கடத்தும் திட்டம் ஒன்றை பிரித்தானியா அண்மையில் அறிவித்திருந்தது. பின்னர் அதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட, தற்போது அதனை நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற கடுமையான சட்டங்களினால் எதிர்வரும் காலங்களில் இந்த அகதிகளின் பயணம் மேலும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025