மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கும் கிளாடியா ஷின்பாம்
3 ஆனி 2024 திங்கள் 09:08 | பார்வைகள் : 2198
மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷின்பாம்(Claudia Sheinbaum) பதவியேற்க உள்ளார்.
மெக்சிகோவில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில் கிளாடியா ஷின்பாம் அமோக வெற்றி பெற்று நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு 58.3% முதல் 60.7% வாக்குகளும், எதிர்கட்சி வேட்பாளருக்கு Xochitl Galvez-க்கு 26.6% முதல் 28.6% வாக்குகளும் இருந்தன.
இந்த முடிவு அதிகாரப்பூர்வ விரைவு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்கு பிறகு தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே பேசிய மொரேனா வேட்பாளர் கிளாடியா ஷின்பாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்பேன் என்று தெரிவித்தார்.