Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு - ரொய்ட்டர் கருத்து கணிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு - ரொய்ட்டர் கருத்து கணிப்பு

3 ஆனி 2024 திங்கள் 14:47 | பார்வைகள் : 2123


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் குடியரசுகட்சிக்கு ஆதரவான வாக்காளர்களில் பத்துவீதமானவர்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது ரொய்ட்டரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டிரம்ப் குடியரசுக்கட்சியின் சிறிய அளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்களின்  ஆதரவை இழக்ககூடும் என்பது கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு இரண்டுநாள்களிற்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் குடியரசுகட்சியின் ஆதரவாளர்களில் 10 வீதமானவர்கள் டிரம்பிற்கு ஆதரவு வழங்குவதா என்பது குறித்து சிந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை நவம்பர் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக காணப்படலாம் , டிரம்பிற்கும் பைடனிற்கும் மிகவும் அவசியமான மாநிலங்களில் சிறிய ஆதரவு இழப்பும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடும்.

இதேவேளை டிரம்பின் உறுதியான ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களை இந்த தீர்ப்பு பாதிக்கவில்லை என தெரிவித்துள்ளதுடன் அவருக்கான தங்கள் ஆதரவை வலுப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்