அமெரிக்காவின் ஒகையோவின் அக்ரோனில் துப்பாக்கி சூடு சம்பவம்

3 ஆனி 2024 திங்கள் 14:51 | பார்வைகள் : 5979
அமெரிக்காவின் ஒகையோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அக்ரோன் நகரில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெலி ஏவ் என்ற பகுதியில் துப்பாக்கிபிரயோக சத்தம் கேட்பதாகவும் பலர் சுடப்பட்டுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்றதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் இடம்பெறுகின்றன இதுவரை சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து விபரங்களை கோரியுள்ளனர்.
நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் இந்த பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் குறித்து தகவல்கள் உள்ளவர்கள் மேலும் வன்முறைகள் பழிவாங்கல் இடம்பெறுவதை தடுப்பதற்காக விபரங்களை வெளியிடவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அவசரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1