Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  13 வயது பிரித்தானிய  சிறுமிக்கு நேர்ந்த கதி 

அமெரிக்காவில்  13 வயது பிரித்தானிய  சிறுமிக்கு நேர்ந்த கதி 

3 ஆனி 2024 திங்கள் 14:58 | பார்வைகள் : 2352


அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறை கொண்டாட்டத்தில் இருந்த பிரித்தானிய குடும்பத்திற்கு கடந்த மே மாத இறுதியில் துயரகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

புளோரிடாவின் Orlando-வில் உள்ள pool at Discovery Cove என்ற தீம் பார்க்கில் விடுமுறைக்கு சென்று இருந்த வேல்ஸை சேர்ந்த 13 வயதான அண்ணா பீமான்ட்(Anna Beaumont) மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

ஆரஞ்சு கவுண்டி ஷெரிஃப் அலுவலக தகவலின்படி, மே 28 ஆம் தேதி அண்ணா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆழ்ந்த துயரத்தோடு, அடுத்த நாள் அவர் காலமானார்.

இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. மருத்துவ பரிசோதனை அலுவலகம் இதனை தீர்மானிக்கும்.

அண்ணா படித்த ராடீர் காம்ப்ரிஹென்சிவ்(Radyr Comprehensive) பள்ளியில் இருந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கு அவர் பள்ளி சமூகத்தின் மதிப்புக்குரிய உறுப்பினர் என்று அவரை நினைவு கூர்ந்தனர். அவரது ஆசிரியர்கள் அவரது கருணை மற்றும் நேர்மறையான மனப்பான்மைக்காக அவரை நினைவு கொண்டனர்.

பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அண்ணாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த கடினமான சமயத்தில் தூதரக ஆதரவை வழங்குவதாகவும் உறுதிப்படுத்தியது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்