பாகிஸ்தானின் இருந்து சீனாவிற்கு புதிய விமான சேவை ஆரம்பிப்பு
3 ஆனி 2024 திங்கள் 15:18 | பார்வைகள் : 6041
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய விமானப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவைகள் வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் என சீனாவின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னர் கடந்த ஜனவரி மாதம் சீனாவின் ஹபே மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு நேரடி விமான சரக்குப் போக்குவரத்து தொடங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுநாள் (2024.06.03) சீனா செல்லவுள்ளார்.
அங்கு 5 நாட்கள் தங்கும் அவர் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan