இலங்கையில் சில கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!
3 ஆனி 2024 திங்கள் 15:58 | பார்வைகள் : 5259
கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது.
அத்துடன், களனி மற்றும் கடுவெல கல்வி வலய பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கும், ஹோமாகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் 04ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan