Paristamil Navigation Paristamil advert login

3,000 மிதிவண்டிகள் நிறுத்தக்கூடிய ஆறு புதிய நிலையங்கள் திறப்பு..!

3,000 மிதிவண்டிகள் நிறுத்தக்கூடிய ஆறு புதிய நிலையங்கள் திறப்பு..!

4 ஆனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2010


ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பரிசில்  3,000 வரையான மிதிவண்டிகளை நிறுத்துவதற்குரிய இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து சபை (Île-de-France Mobilités) இதனை நேற்று ஜூன் 3, திங்கட்கிழமை திறந்து வைத்து அறிவித்துள்ளது. 'பரிசில் வசிக்கும் மக்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இது அமையும். குறிப்பாக இந்த ஒலிம்பிக் காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Austerlitz, 
Montparnasse, 
Gare de l'Est, 
Gare du Nord, 
Saint-Lazare,
Bercy

ஆகிய ஆறு நிலையங்களுக்கு அருகே இந்த நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. Gare du Nord நிலையத்தில் மொத்தமாக 1,100 மிதிவண்டிகள் நிறுத்துவதற்குரியப் இடம் தற்போது தயாராக உள்ளது.

அதேவேளை, Gare de Lyon அருகே 400 மிதிவண்டிகள் நிறுத்துவதற்குரிய இலவச தரிப்பிடம் இவ்வருட ஜனவரியில் திறந்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்