மாநில வாரியாக பா.ஜ., காங்கிரஸ் கூட்டணி செல்வாக்கு என்ன?
4 ஆனி 2024 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 1341
லோக்சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகின்றன. இதில் மாநில வாரியாக கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பல மாநிலங்களில் பா.ஜ., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. சில மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி முன்னணியில் உள்ளன. உ.பி., போன்ற மாநிலங்களில் பா.ஜ., முழுமையாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணியும் முட்டிமோதி வருகின்றன.
உ.பி.,யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பா.ஜ., 34 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 43 இடங்களிலும் (காங்.,-8, சமாஜ்வாதி-35) முன்னிலையில் உள்ளன. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் பா.ஜ., 25 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. டில்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.,வே முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்.,-28, பா.ஜ.,-12, காங்.,-1, மா.கம்யூ.,-1 இடங்களில் முன்னணியில் உள்ளன.
மாநில வாரியாக முன்னிலை பெற்ற கட்சி/கூட்டணி
அசாம் - பா.ஜ., 10 தொகுதிகளில் முன்னிலை
அந்தமான் நிக்கோபர் - பா.ஜ., 1 தொகுதியில் முன்னிலை
அரியானா - காங்., 6 தொகுதிகளில் முன்னிலை
அருணாசல பிரதேசம் - பா.ஜ., 2 தொகுதிகளில் முன்னிலை
ஆந்திரா - பா.ஜ., 20 தொகுதிகளில் முன்னிலை
இமாச்சல பிரதேசம் - பா.ஜ., 4 தொகுதிகளில் முன்னிலை
உத்தரபிரதேசம் - பா.ஜ., 43 தொகுதிகளில் முன்னிலை
உத்தரகண்ட் - பா.ஜ., 5 தொகுதிகளில் முன்னிலை
ஒடிசா - பா.ஜ., 16 தொகுதிகளில் முன்னிலை
கர்நாடகா - பா.ஜ., 21 தொகுதிகளில் முன்னிலை
குஜராத் - பா.ஜ., 20 தொகுதிகளில் முன்னிலை
கேரளா - காங்கிரஸ் 16 தொகுதிகளில் முன்னிலை
கோவா - பா.ஜ., மற்றும் காங்., தலா 1 தொகுதியில் முன்னிலை
சட்டீஸ்கர் - பா.ஜ., 9 தொகுதிகளில் முன்னிலை
சண்டிகர் - காங்., 1 தொகுதியில் முன்னிலை
சிக்கிம் - எஸ்.கே.எம் கட்சி 1 தொகுதியில் முன்னிலை
ஜம்மு காஷ்மீர் - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலா 2 தொகுதிகளில் முன்னிலை
லடாக் - சுயேட்சை வேட்பாளர் முன்னிலை
ஜார்க்கண்ட் - பா.ஜ., 3 தொகுதிகளில் முன்னிலை
டாமன் டையூ - சுயேட்சை வேட்பாளர் முன்னிலை
தாத்ரா ஹவேலி - பா.ஜ., 1 தொகுதியில் முன்னிலை
திரிபுரா - பா.ஜ., 2 தொகுதிகளில் முன்னிலை
தெலுங்கானா - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலா 8 தொகுதிகளில் முன்னிலை
நாகாலாந்து - காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை
பீஹார் - பா.ஜ., 28 தொகுதிகளில் முன்னிலை
பஞ்சாப் - காங்., 7 தொகுதிகளில் முன்னிலை
புதுச்சேரி - காங்., ஒரு தொகுதியில் முன்னிலை
மஹாராஷ்டிரா - பா.ஜ., 26 தொகுதிகளில் முன்னிலை
மணிப்பூர் - காங்., 2 தொகுதிகளில் முன்னிலை
மத்திய பிரதேசம் - பா.ஜ., 29 தொகுதிகளில் முன்னிலை
மிசோரம் - ஜோரம் மக்கள் இயக்கம் ஒரு தொகுதியில் முன்னிலை
மேகாலயா - காங்கிரஸ் மற்றும் மக்கள் குரல் கட்சி தலா ஒரு தொகுதியில் முன்னிலை
மேற்குவங்கம் - திரிணமுல் காங்., 31 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் - பா.ஜ., 13 தொகுதிகளில் முன்னிலை
லட்சத்தீவு - காங்., ஒரு தொகுதியில் முன்னிலை