Paristamil Navigation Paristamil advert login

ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலை - அவசரகால நிலை அறிவிப்பு

ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலை - அவசரகால நிலை அறிவிப்பு

4 ஆனி 2024 செவ்வாய் 08:07 | பார்வைகள் : 885


ஜெர்மனின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு  ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

அத்துடன் , மக்கள் தங்குவதற்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்