திருமண புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்த ஹர்திக் மனைவி நடாஷா...

4 ஆனி 2024 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 7053
இந்திய அணியின் துணை கேப்டனாகிய ஹர்திக் பாண்டியாவின் மனைவி, நீக்கப்பட்ட திருமண புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார்.
இவர்கள் அவ்வப்போது குடும்பமாக சேர்ந்து ஒரு சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். சமீபக் காலமாக நடாஷா ஸ்டான்கோவிக் அவர்களுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியிருந்தார்.
நடந்த IPL போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்க்க மனைவி நடாஷா வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.
Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் பெயர் வைத்து இருந்த அவர், தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கியும் இருந்தார்.
இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கருத்து தெரிவித்து வந்தனர். அது தொடர்பில் ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் மனைவி நடாஷா ஒரு செயலை செய்துள்ளார்.
நடாஷா ஸ்டான்கோவிக் தனது சமூக ஊடகத்தில் இருந்து நீக்கிய படங்களை தற்போது Restore செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் பிரியவில்லை என சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
மேலும் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1