Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் திரைக்கு வரும் அந்நியன்...

மீண்டும் திரைக்கு வரும்  அந்நியன்...

24 ஆவணி 2023 வியாழன் 16:17 | பார்வைகள் : 8543


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - சதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் அந்நியன். 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 57 கோடி வசூல் செய்தது. அதோடு இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்காக தேசிய விருது கிடைத்தது. அந்நியன் படம் திரைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்த படத்தை 4 கே வெர்சனில் மீண்டும் திரையிட அப்படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த வேட்டையாடு விளையாடு படம் மீண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அந்நியன் படமும் அதே தொழில்நுட்பத்துடன் திரைக்கு வரப்போகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்