Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில்  புதிய விதிகள்

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில்  புதிய விதிகள்

4 ஆனி 2024 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 1895


சுவிட்சர்லாந்தில் அகதிகளின் வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல், புகலிடம் தொடர்பான பல மாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் மக்கள், தாங்கள் வசிக்கும் மாகாணத்தைவிட்டு, தாங்கள் பணிபுரியும் மற்றொரு மாகாணத்துக்கு மாறுவது எளிதாக இருக்கும். 

அதற்கேற்ப வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் ஒருங்கிணைப்பு சட்டத்தில் (FNIA) மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

அத்துடன், அரசாணையில் மேலும் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. 

முதலாவதாக, ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், சுயதொழில் அல்லது வேலைக்கான அங்கீகாரத்தேவை (authorisation requirement) நீக்கப்படும். 

இரண்டாவதாக, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட நபர்கள், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்கள், ஆதாயமான வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்வது கட்டாயம் என்னும் விதி ரத்துசெய்யப்படும்.

மேலும், அரசாணையில் செய்யப்பட்ட மற்றொரு திருத்தம் காரணமாக, ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், புகலிடம் நிராகரிக்கப்பட்டோர் மற்றும் ஆவணங்களற்ற இளம் புலம்பெயர்ந்தோர் தொழிற்கல்வி பெறுவதும் எளிதாக்கப்பட உள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்