Paristamil Navigation Paristamil advert login

டீக்கடை போண்டா

டீக்கடை போண்டா

4 ஆனி 2024 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 328


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரின் இந்த டீக்கடை போண்டாவை விரும்பி சாப்பிடுவார்கள். இது சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த டீக்கடை போண்டா செய்வது மிகவும் ஈஸி. சரி வாங்க.. இப்போது, இந்த கட்டுரையில் டீக்கடை ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கு டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

டீக்கடை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

டீக்கடை போண்டா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த ரவை மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை கிளறிவிடுங்கள். இதனை அடுத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இன்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதை மூடி வைத்து, சுமார் அரை மணி நேரம் ஊற வையுங்கள். இப்படி ஊற வைத்தால், போண்டா பஞ்சு போல சாப்டாக வரும். அரை மணி நேரம் கழித்து அதில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களிடம் சமையல் சோடா இல்லை என்றால், அந்த மாவை சுமார் மணிநேரம் ஊற வையுங்கள். இப்போது டீக்கடை போண்டா செய்வதற்கான மாவு தயார்.

இதனை அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், தயாரான மாவை ஒரு சின்ன கரண்டியில் எடுத்து, அதை எண்ணெயில் ஊற்றுங்கள். இரண்டு பக்கமும் நன்கு  பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் சூடான டீக்கடை இனிப்பு போண்டா ரெடி.!! 

வர்த்தக‌ விளம்பரங்கள்