உக்ரேனிய ஜனாதிபதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்..!
4 ஆனி 2024 செவ்வாய் 18:41 | பார்வைகள் : 8902
உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky, பிரெஞ்சு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 7 ஆம் திகதி இந்த உரை இடம்பெற உள்ளது.
Normandie தரையிறக்கத்தின் (Débarquement de Normandie) 80 ஆவது ஆண்டு நிகழ்வு நாளை 5 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான அஞ்சலி நிகழ்வு இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக பாராளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு இந்த உரை இடம்பெற உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan