பிரான்சில் வைத்து அமெரிக்க-உக்ரேன் ஜனாதிபதிகள் சந்திப்பு..!
5 ஆனி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7444
அமெரிக்க மற்றும் உக்ரேன் நாட்டு ஜனாதிபதிகள் பிரான்சில் வைத்து சந்திப்பை மேற்கொள்ள உள்ளனர்.
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் பிரான்சுக்கு வருகை தர உள்ளனர். உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky யும் வருகை தர உள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஊடகபேச்சாளர் இதனை நேற்று ஜூன் 4 ஆம் திகதி அறிவித்தார்.
உக்ரேனுக்கு பலதரப்பட்ட உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா, மேலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், இந்த சந்திப்பின் போது அது தொடர்பில் பைடன் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் இத்தாலியில் இடம்பெற உள்ள G7 மாநாட்டில் வைத்தும் இவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan