Paristamil Navigation Paristamil advert login

நேதன்யாகுவிற்கு எதிராக செனட்சபை நிறைவேற்றிய சட்டம்

நேதன்யாகுவிற்கு எதிராக செனட்சபை நிறைவேற்றிய சட்டம்

5 ஆனி 2024 புதன் 06:18 | பார்வைகள் : 1742


இஸ்ரேல் நாடானது காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் பல நாடுகள்  இஸ்ரேல் நாட்டின் மீது பாரிய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் , சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்ட மூலம் அமெரிக்க செனட்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள செனட்பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்,155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிராகரிப்பார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. 

செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டமூலம் சட்டமாகும்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கின்றார் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்