Paristamil Navigation Paristamil advert login

யாழில் வீடொன்றுக்குள் திருடர்கள் கைவரிசை - பெருந்தொகை தங்கம் கொள்ளை

யாழில் வீடொன்றுக்குள் திருடர்கள் கைவரிசை - பெருந்தொகை தங்கம் கொள்ளை

25 ஆவணி 2023 வெள்ளி 04:44 | பார்வைகள் : 7253


யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வங்கி ஒன்றுக்கு சென்ற சமயம் , வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

அதேவேளை வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா உள்ளிட்ட அவற்றின் தொகுதிகளையும் பிடுங்கி சென்றுள்ளனர்.

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்