இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
5 ஆனி 2024 புதன் 06:38 | பார்வைகள் : 11829
இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக வாந்தி, அஜீரணம், காய்ச்சலுடன் கூடிய வயிற்று வலி போன்றவை காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan