T20 உலகக் கோப்பையை வெல்லும் அணியின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
5 ஆனி 2024 புதன் 08:09 | பார்வைகள் : 1039
T-20 உலகக் கோப்பை வெற்றியாளருக்கு பரிசுத் தொகையாக ரூ. 74 கோடி வழங்கப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்து வரும் டி-20 உலகக் கோப்பையில் மொத்தம் 11.25 million Dollar (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.340 கோடி) பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.74 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அதேபோல், ரன்னர் அப் அணிக்கு 1.28 இல்லின் டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.38 கோடி) வழங்கப்படும் என ICC தெரிவித்துள்ளது.
டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் இது மிகப் பாரிய பரிசுத் தொகை என ஐசிசி கூறுகிறது.
2.45 மில்லியன் டொலர் தவிர, வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டி பார்படாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவர் மைதானத்தில் நடைபெறும், இந்தப் போட்டிக்குப் பிறகு பரிசுத் தொகை விநியோகிக்கப்படும்.
இந்த நிகழ்வு பல வழிகளில் வரலாற்று சிறப்புமிக்கது என்று ஐசிசி தலைமை நிர்வாகி Geoff Allardice கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில், வீரர்கள் பெறும் பரிசுத் தொகையில் இது பிரதிபலிக்க வேண்டும் என்று ஐசிசி முடிவு செய்துள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அணிக்கு குறைந்தபட்சம் ரூ. 7 கோடி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு 787,500 டொலர் வழங்கப்படும். சூப்பர்-8 சுற்றில் வெளியேறும் 4 அணிகளுக்கு 382,500 டொலர் வழங்கப்படும்.
9, 10, 11 மற்றும் 12வது இடத்தில் உள்ள அணிகளுக்கு 247,500 டொலர் வழங்கப்படும். 13 முதல் 20வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு 225,000 டொலர் வழங்கப்படும்.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைத் தவிர்த்து, தங்கள் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு கூடுதலாக 31,154 டொலர் வழங்கப்படும்.