Paristamil Navigation Paristamil advert login

வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்

வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்

25 ஆவணி 2023 வெள்ளி 04:50 | பார்வைகள் : 5138


இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி வீதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, வழக்கமான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக இருக்கும்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அடமான வசதிகளுக்காக வருடாந்த அதிகபட்ச வட்டி வீத வரம்பான 18% ஐ விதிக்கவும் தீர்மானித்துள்ளது.

தற்காலிக ஓவர் டிராஃப்ட்களுக்கு ஆண்டுக்கு 23 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும், கடனட்டை வசதிகளுக்கு ஆண்டுக்கு 28 சதவீத வட்டி வரம்பு விதிக்கவும் முடிவு செய்தனர்.

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்