Paristamil Navigation Paristamil advert login

பரிசை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி தம்பதிகள்..!

பரிசை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி தம்பதிகள்..!

5 ஆனி 2024 புதன் 13:44 | பார்வைகள் : 8336


அமெரிக்க ஜனாதிபதி தம்பதிகள் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் இன்று புதன்கிழமை முற்பகல் பரிசை வந்தடைந்தனர்.

நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர்கள் வருகை தந்துள்ளனர். ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இருவரும் வருகை தர, பிரதமர் கேப்ரியல் அத்தால் அவர்களை வரவேற்றார். 

Normadie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு  நினைவு நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். அத்தோடு, உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியையும் சந்தித்து உரையாட உள்ளார். எலிசே மாளிகையில் ஜனாதிபதி மக்ரோனுன் விருந்துபரசாரமும் இடம்பெற உள்ளது. 

அதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசிலும் இல் து பிரான்சின் சில பகுதிகளிலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள்  கொண்டுவரப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்